Join THAMIZHKADAL WhatsApp Groups
நடந்து முடிந்த டிஇடி தேர்வுகள் பொதுவாகவே மிகவும் கடினத் தன்மையுடன் வினா அமைப்பு அமைக்க பெற்றிருந்தது நாம் அறிந்த ஒன்று. எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் படித்து தேர்வு எழுதி இருந்தாலும் , கேட்கப்பட்ட வினாக்கள் HOT என்ற உயர் சிந்தனை வினா அளவிலேயே இருந்தது . மேலும் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் TET தேர்வுகளில் தேர்ச்சி பெற 82 என்ற மதிப்பெண்களை ( 55 % ) கொடுத்திருந்தனர். அப்போது TET தேர்வு மட்டுமே பணி நியமனத்திற்காக இருந்தது.
ஆனால் தற்போது பணி நியமனம் பெற இரண்டாவதாக மேலும் ஒரு நியமனத் தேர்வு எழுதிய ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால் TET தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 50 % ஆக இருந்தால் ( 75 மதிப்பெண்கள் ) சற்றே நிம்மதியுடன் , நம்பிக்கையுடன் அடுத்த தேர்வு எழுத தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தயாராக வாய்ப்பு உள்ளது . ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல அது ஒரு தகுதி தேர்வு மட்டுமே . அதாவது 75 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற அறிவிப்பை வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமுகஸ்டாலின் அவர்களுக்கு பணிந்து கோரிக்கை விடுக்கிறோம் - நன்றி .
No comments:
Post a Comment