Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 25, 2023

தமிழக பொதுப்பணித்துறையில் 500 காலியிடங்கள் பிஇ, பிடெக், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிஇ, பிடெக், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசில் துறை வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகம் மற்றும் நிரந்தரம் என 2 வகைககளில் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியிட்டப்பட்டுள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் Graduate Apprentice, Diplomo Apprentice ஆகிய 2 பிரிவுகளில் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் Graduate Apprentice பணிக்கு 335 பேரும் (Civil 315, EEE 25, Architecture 15), Diplomo Apprentice பணிக்கு 145 (Civil 115, EEE 25, Architecuture 5 ) பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். Graduate Apprentice பிரிவில்

கல்வி தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ, பிஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். அதன்படி Graduate Apprentice பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக் படிப்பையும், Diplomo Apprentice பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?

Graduate Apprentice பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். Diplomo Apprentice பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் மாதசம்பளமாக வழங்கப்படும். வயது வரம்பு என்பது Apprentice விதிகள் படி பின்பற்றப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?


இது ஓராண்டுக்கான தற்காலிக பணியாகும். விண்ணப்பம் செய்ய கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் boat-srp.com இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய மார்ச் 31ம் தேதி கடைசி நாளாகும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணClick Here

By Nantha Kumar R Oneindia

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News