Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 17, 2023

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 உதவித் தொகை: பெற்றோர்களுக்கான முக்கிய அறிவுப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் பெண் குழந்தையை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையைத் தடுக்கவும், முதலமைச்சர் பெண் பாதுகாப்புத் திட்டம் (Chief Ministers Girl Child Protection Scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருப்பின் அந்த பெண் குழந்தையின் பெயரில் ரூ.50,000 இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25, 000, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து சேமிப்பு பத்திரங்களாக வழங்கப்படுகிறது. இச்சேமிப்பு பத்திரம், 18 வயது நிறைவடைந்த 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த அக்குழந்தைகளுக்கு மட்டுமே வட்டியுடன் கூடிய முதிர்வு தொகையுடன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்தும், முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட சேமிப்பு பத்திரத்துடன், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டா ஆகியவற்றுடன் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும், 0431- 2413796 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News