Join THAMIZHKADAL WhatsApp Groups
பி.எட். சிறப்புக் கல்வி கணினி வழி நுழைவுத் தோ்வு பிப்.26 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.19) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பி.எட். சிறப்புக் கல்வி சோ்க்கைக்கான கணினி வழி நுழைவுத் தோ்வு பிப்.26-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment