Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்த மனித சமுதாயம் ஆரோக்கியமாக நோயின்றி வாழ இயற்கை பல மூலிகைகளை அள்ளி கொடுத்துள்ளது ,அந்த மூலிகைகளின் மகத்துவம் தெரிந்தோர் அதை சாப்பிட்டு ஆரோக்கியமாக உள்ளனர் .அதன் மதிப்பு தெரியாதோர் ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுகின்றனர் .அந்தவகையில் அருகம் புல் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம் ,
இந்த அருகம் புல் ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று முதலில் தெரிந்து கொள்வோம் ,முதலில் அருகம்புல்லை ஒரு பாத்திரத்தில் இடித்து பின்னர் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும் ,பின்னர் இதனுடன் துளசி மற்றும் வில்வம் சேர்த்து இடிக்கலாம் .
இதை தினம் வெறும் வயிற்றில் காலையோ அல்லது மாலையோ குடித்து வரலாம் .அடுத்து இந்த அருகம் புல் ஜூஸ் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
1.சிலருக்கு வாயுத் தொல்லை பாடாய் படுத்தும் .இந்த தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம்.
2.சிலருக்கு உடல் உஷ்ணம் இருந்து பல நோய்களை கொடுக்கும் .இந்த உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
3.சிலருக்கு இருக்கும் நரம்புத் தளர்ச்சியை இந்த ஜூஸ் குணப்படுத்தும் ,
4.சில பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் நிறைய பிரச்சினை இருக்கும் .இந்த பெண்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
No comments:
Post a Comment