Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 10, 2023

வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்களை வெளியேற்றனுமா? இந்த பயிற்சியை மறக்கமால் செய்திடுங்க போதும்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம்.

அந்த நச்சுகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம்.

இல்லாவிடின் ஒரு சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது.

அந்தவகையில் தற்போது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் ஒரு உடற்பயிற்சி ஒன்றை எப்படி செய்யலத் என்பதை பார்ப்போம்.

பயிற்சி

முதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். வஜ்ராசனம், அல்லது பத்மாசனத்தில் அமர வேண்டும்.

இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.

மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும்.

இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

இரு மூக்கின் வழியாக தனித்தனியாகவும் செய்யலாம். வலது மூக்கை மூடிக்கொண்டு இடது மூக்கின் வழியாக மூச்சை நன்றாக உள்ளிழுத்து வேகமாக வெளியில் விட வேண்டும். இவ்வாறு 5 நிமிடம் செய்யவேண்டும். பின்னர் இதேபோல் இடது மூக்கில் செய்ய வேண்டும்.

பலன்கள்மூச்சை இழுத்து விடும்போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.


இரத்தத்துக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைப்பதால் ரத்தம் சுத்தமாகிறது.


செரிமானத்தைத் தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.


அனைத்து குடல் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.


கண்களில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்குகிறது.


உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறையும். மனதை அமைதிப்படுத்தி மனப்பதற்றத்தையும் குறைக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News