சுகர் பேஷன்டுகள் காய்கறிகள் மற்றும் பழங்கள் ,முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் பால் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும் .
கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை சேர்த்து கொள்ள கூடாது.
ப்ரோக்கோலி ,கீரைகள் ,ஓட்மீல், பிரவுன் ரைஸ் மற்றும் தானிய ரொட்டிகள் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் சிறந்தவை என்று ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
ஆனால் நீரிழிவு நோயாளி எந்த உணவை சேர்த்து கொள்ள கூடவே கூடாது என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்
1.மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு (Glycemic index) அதிகம். . எனவே, சர்க்கரை நோயாளிகள் தடை விதிக்கவேண்டிய முக்கிய உணவு பரோட்டா.இது சுகர் அளவு கூடிவிடும் அபாயம் உள்ளது
2.சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையைக் கூட்டும் அபாயம் கொண்ட உணவு வகையாகும் ,அடிக்கடி இந்த பரோட்டாவை சாப்பிடுவோருக்கு எடை கூடுவது தவிர்க்க முடியாது
No comments:
Post a Comment