Join THAMIZHKADAL WhatsApp Groups
நம் முன்னோர்கள் உடலை வருத்தி செய்த வீட்டு வேலைகளால் அவர்கள் உடல் எடை அதிகமாகாமல் இருந்தனர் .குறிப்பாக வீட்டில் குழவியில் மாவாட்டுவது ,அம்மிக்கல்லில் சட்னி ,மசாலா அரைப்பது ,துணி துவைப்பது என்று இயந்திரம் இல்லாமல் எல்லா வேலையையும் செய்து வந்ததால் ஆரோக்கியமாக இருந்தனர் .இது போல் நாமும் எடை அதிகமாகாமல் இருக்க நீச்சல் ,சைக்கிளிங் ,ஸ்கிப்பிங் ,டான்ஸ் என்று செய்தால் போதும் எடை அதிமாகாது .இதனுடன் பின் வரும் கஷாயத்தை குடித்து வந்தால் போதும் உடல் எடை குறைவது நிச்சயம்
1.குடம் புளியை நான்கு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும் . குடம் புளி தண்ணீரில் நன்றாக ஊறிய பின்பு அந்த தண்ணீரில் 10 புதினா இலைகள், 1/2 இன்ச் அளவு இடித்த இஞ்சி, உப்பு 2 சிட்டிகை, போட்டு நன்றாக கலந்து அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் போல கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
2.பின்பு இதை வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிக்க வேண்டும்.
3.காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்தல் நலம் சேர்க்கும் .
4.. காலையில் குடிக்க முடியாதவர்கள் உணவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து எப்போது வேண்டும் என்றாலும் குடித்து வர எடையில் நல்ல மாற்றம் தெரியும்
5.தினமும் இந்த தண்ணீரை குடித்து , எண்ணெய் பண்டங்களை தவிர்த்து விட்டால் உங்களுடைய உடல் எடை குறைவதில் வேகமாக நல்ல வித்தியாசம் தெரியும்
No comments:
Post a Comment