Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவ படிப்புகளுக்காக அகில இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கிராமங்களில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இந்த நீட் தேர்வு மிகக் கடினமானதாக இருக்கும் என்றும் அனைத்து தரப்பு மாணவர்களும் மருத்துவர் ஆகிவிடக்கூடாது என மத்திய அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அது நிராகரிக்கப்பட்டது. அதேபோல், ஆட்சி மாறி திமுக பொறுப்பேற்றதும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இத்தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து, கடந்த சில தினங்கள் முன்பு நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக மனுத்தாக்கல் ஒன்றை செய்து இருந்தது. தமிழகத்தில் நீட் விலக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு சார்பாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் ஒன்றை செய்தது. அதில் நீட் தேர்வு நடத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது. கூட்டாட்சி கொள்கையையே இது மீறுவதாக உள்ளது. நீட் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என அறிவிக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று திமுக பொறுப்பேற்ற பின் தமிழ்நாடு சார்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. மேலும், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மனுவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறவும் அறிவுறுத்தியுள்ளது. பல வலுவான வாதங்களுடன் தமிழ்நாடு அரசு புதிய மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்ததால் அதன் மீது விரைவில் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
No comments:
Post a Comment