Join THAMIZHKADAL WhatsApp Groups
மூல நோய் உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே சில உணவுகளை எடுத்துக் கொண்டால் அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியும்.
அத்தகைய எளிய இயற்கை வைத்திய முறைக்கு உதவக்கூடியது தான் சுண்டைக்காய். இதை பயன்படுத்தி மூல நோயை எவ்வாறு குணமாக்கலாம் என்பதை பார்ப்போம்.
இஞ்சி பூண்டு இடிக்கின்ற கல்லில் அரை கைப்பிடி அளவு சுண்டைக்காய், தோல் உரித்த பூண்டு பற்கள் 2, ஐந்து சின்ன வெங்காயம், ஐந்து மிளகு, அரை ஸ்பூன் சீரகம். இவைகளை கல்லில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றவும். பிறகு இதில் இடித்து வைத்துள்ள கலவையை போடவும். 200 மில்லி தண்ணீர் 100 மில்லியாக வற்றும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். இதில் சுவைக்காக கருப்பட்டி சேர்க்கவும். வெள்ளை சர்க்கரை மட்டும் சேர்க்கவே வேண்டாம்.
நன்கு கொதித்ததும் இதை சிறிது நேரம் ஆறவிட்டு குடிக்கின்ற பக்குவம் வந்தவுடன் ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும். இதை தினமும் காலை வேளைகளில் அருந்தி வரலாம். ஒரு 15 நாட்களிலேயே ரத்தம் மூலம் குணமாகிவிடும். உங்களுக்கு எந்த வகை மூலநோய் வந்திருந்தாலும் சரி. ஒரு 48 நாட்களுக்கு இதனை தொடர்ந்து குடித்து வர முற்றிலும் குணமாகும்.
காலை வேளைகளில் காபி, டீக்கு பதிலாக இதை அருந்தலாம். மூல நோய் இல்லாதவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் இதனை குடித்து வரலாம். மூலநோய் பிரச்சனை உள்ள குழந்தைகள் இதனை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம். இது நன்றாக பலன் கொடுக்கும் ஒரு அற்புத வைத்திய முறையாகும்.
No comments:
Post a Comment