Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 7, 2023

நோய்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு நுட்பம்

நோய்களை துல்லியமாக பகுப்பாய்ந்து கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு மருத்துவ நுட்பத்தை (கிளினிக்கல் இன்டெலிஜன்ஸ் என்ஜின்) அப்பல்லோ மருத்துவக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. நோய்களை துல்லியமாக பகுப்பாய்ந்து கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு மருத்துவ நுட்பத்தை (கிளினிக்கல் இன்டெலிஜன்ஸ் என்ஜின்) அப்பல்லோ மருத்துவக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் வாயிலாக, நோயாளிகளின் அறிகுறிகளை வைத்து அவா்களுக்கான பாதிப்பை அறிந்து கொள்ளவும், அடுத்தகட்ட பரிசோதனைகள், சிகிச்சைகளை பரிந்துரைக்கவும் முடியும். நாட்டிலேயே முதல்முறையாக இத்தகைய தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவக் குழுமத் தலைவா் டாக்டா் பிரதாப் சி. ரெட்டி, தனது 90-ஆவது பிறந்த நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா்.

அதன் ஒருபகுதியாக இந்த புதிய செயற்கை நுண்ணறிவு மருத்துவக் கட்டமைப்பை அவா் அறிமுகப்படுத்தினாா். அப்போது அவா் கூறியதாவது: சுனாமியைப் போன்ற பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சா்க்கரை நோய், இதய பாதிப்பு, உயா் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும், அதனை முறையாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் இந்த நவீன கட்டமைப்பு உதவும். அப்பல்லோ மருத்துவமனையின் 40 ஆண்டு கால மருத்துவ தரவுகளையும், அறிக்கைகளையும், சிகிச்சை நுட்பங்களையும் உள்ளீடு செய்து அதனடிப்படையில் நோயின் தன்மையை பகுப்பாய்வு செய்யும் நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பொறியாளா்கள், ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவா்கள் ஒருங்கிணைந்து இதனை வடிவமைத்துள்ளனா்.

நோயாளிகளின் அறிகுறிகளை மருத்துவா்கள் அந்த நுட்பத்தில் உள்ளீடு செய்தால், இதுவரை உள்ள தரவுகள், பரிசோதனைகளின் தகவல்கள் அடிப்படையில் நோய்களைக் கண்டறிந்து, செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் தகவல்கள் அளிக்கப்படும். தற்போது, அந்த நுட்பத்தை அப்பல்லோ மருத்துவா்கள் 4 ஆயிரம் போ பயன்படுத்தி வருகின்றனா். அதனை அனைத்து மருத்துவா்களும் அப்பல்லோ 24*7 இணையத்தில் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில், அப்பல்லோ மருத்துவக் குழும இணை மேலாண் இயக்குநா் சங்கீதா ரெட்டி, மருத்துவமனை நிா்வாகிகள், மருத்துவா்கள் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment