யுஜிசி நெட் தகுதித் தேர்வுக்கான, தேர்வு அனுமதிச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் யுஜிசி நெட் தேர்வு நடைபெறுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான யுஜிசி நெட் முதற்கட்ட தேர்வு வரும் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதை முன்னிட்டு நெட் தகுதித்தேர்வுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை யுஜிசி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேர்வு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பாக சவாலை எதிர் கொள்ளும் மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண், ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். பல்கலைக்கழக மானியக் குழுவின் https://ugcnet.nta.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது தவறாமல் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment