Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 17, 2023

காற்று மாசுக்கு தீர்வு: பள்ளி சிறுமி கண்டுபிடிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

காற்றுமாசை வடிகட்டி சுத்தமான காற்றை தரும் 'பேக்' ஒன்றை பிரிட்டன் சிறுமி கண்டுபிடித்துள்ளார்.

பிரிட்டனின் ஹடர்ஸ்பீல்டு நகரை சேர்ந்தவர் எலினார் உட்ஸ் 12, இவரது தாய் அனாபல் ேஹாப்ஸ் 58, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர். இதனால் சுத்தமான காற்று அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இதை பிரிட்டனின் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி பல்கலையுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 'எனது வீட்டில் காற்று சுத்திகரிப்பான் (பேக்) உள்ளது. என் தாய் ஆஸ்துமாவால் பட்ட சிரமம் இதை கண்டுபிடிக்க துாண்டுகோலாக அமைந்தது. நான் உருவாக்கிய இந்த 'பேக்' குழந்தைகளை தைரியமாக வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல, ஜலதோஷம் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

மேலும் என்நண்பர்கள், வகுப்பினர் பாதுகாப்பான காற்றை சுவாசிக்க உதவுகிறது. காற்றுமாசு எப்படி உடல்நலத்தை பாதிக்கிறது, மற்றவருக்கு நோயை பரப்புகிறது பற்றி கொரோனா காலத்தில் தெரிந்து கொண்டேன். ஊரடங்கில் நிறைய நேரம் தாயிடம் செலவிட நேர்ந்ததால், அவரதுகஷ்டமும் புரிந்தது. காற்று மாசு பற்றி, எங்கள் தலைமுறை மாணவர்களுக்கு நன்கு தெரியும்.

இதனால் பள்ளியில் ஒருவரிடம் இருந்து மற்றவரும் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுப்பதற்கு இதை தயாரிக்க நினைத்தேன்.இதையடுத்து காற்றை சுத்தப்படுத்தும் ஊதா நிற 'பேக்' கண்டுபிடித்தேன். ஊதா நிறம் எனக்கு ரெம்ப பிடிக்கும். ஏனெனில் ஊதா என்றாலே சுத்தமானது.எனது வீடு சாலையின் அருகில் இருந்தது.

பள்ளிக்கு சாலையில் நடந்து செல்ல நேரிட்டதால் வாகனங்களின் புகையை சுவாசிக்கும் சூழல் ஏற்பட்டது. உலகில் பலர் இதை (பேக்) பயன்படுத்த தொடங்கி விட்டால் இது இந்த பூமிக்கே நல்லது. இந்த 'பேக்' பிளாஸ்டிக்கில் தயாரிக்காமல், மறுசுழற்சி & மக்கும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டது' என்றார்.இயங்குவது எப்படி ? இது சூரிய ஒளி மின்சாரம், டைனமோவில் இயங்கும். இதிலுள்ள டைனமோ இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது. பேக்கின் உள் அமைக்கப்பட்ட வடிகட்டி, மாசு காற்றை சுத்திகரித்து சுத்தமான காற்றை வழங்க உதவுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News