Join THAMIZHKADAL WhatsApp Groups
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஒரு சில மூலிகை வகைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட அதிகமாக இருப்பது இதனை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம்.
அன்றாட வாழ்வில் நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் தவறான உணவு பழக்க வழக்கங்கள் மோசமான வாழ்க்கை முறையின் காரணமாகவும் நம் உடலில் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு இவ்வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு சவாலான என்னவென்றால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சீராக வைத்துக் கொள்வது மற்றும் அதனை படிப்படியாக குறைப்பது. இதனை ஒரு சில மூலிகைகளை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.
சிறு குறிஞ்சாண் மூலிகை சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு நோய்களை தடுக்கவும் மற்றும் மருந்தாகவும் உதவுகிறது. சிறுகுறிஞ்சான் இலைகளை இரண்டு அல்லது மூன்று வாய்ப்பகுதியில் வைத்து மென்று உட்கொண்டதற்குப் பிறகு இனிப்பான உணவை சாப்பிட்டால் இனிப்பு சுவை உணர இயலாது எனவே இதனை சர்க்கரை கொல்லி என்னும் அழைக்கிறார்கள்.
சிறுகுறிஞ்சான் இலைகளில் ஜிம்னிக் ஆசிட் என்னும் அமிலத்தன்மை கொண்டுள்ளது. இவை கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகப்படுத்துவதோடு ரத்த சர்க்கரையின் அளவை நன்கு கட்டுப்படுத்த உதவும்.
சிறுகுறிஞ்சான் இலைகளை நன்றாக காய வைத்து அதன் பிறகு இதனை பொடி செய்து காலை நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதற்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நேரில் ஒரு ஸ்பூன் சிறுகுறிஞ்சான் தோளினை நன்றாக கலக்கி உட்கொண்டதற்கு பிறகு உணவு எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதன் காரணமாக நம் உணவில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நம் உடலை பாதுகாக்கிறது.
ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுவதற்கு ஆவாரம்பூ ஓர் அரு மருந்தாக செயல்படுகிறது. சர்க்கரை நோயினால் வரக்கூடிய சிறுநீரக பாதிப்புகள் வராதவாக முற்றிலும் பாதுகாத்துக் கொள்கிறது. ஆவாரம் பூவினை வெயிலில் காயவைத்து காலை நேரங்களில் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து டீ போன்று பருகி வருவதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த உதவுகிறது.
No comments:
Post a Comment