Join THAMIZHKADAL WhatsApp Groups
இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கடந்த ஓராண்டாக நன்முறையில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் கற்றலை மேம்படுத்துவதற்கென சிறப்பான. எளிமையான மற்றும் புதுமையான கற்றல் உபகரணங்களை தன்னார்வலர்கள் உருவாக்கி கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாரட்டுக்கள் . தற்போது மாணவர்களின் கற்பனைத்திறன் , படைப்பாற்றல் திறன் , சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிகழ்வாக இம்மாதம் நம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் “ சிட்டுக்களின் குறும்படம் " என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் மூன்று நிமிடக் குறும்படம் மாணவர்களால் உருவாக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment