Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளுக்கு இணையான கல்வித் தகுதி சார்ந்த விவரங்களை தமிழ்நாடு உயர்க்கல்வித் துறை வெளியிட்டது.
அதில், மாநிலத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் 21 பட்டப்படிப்புகளை அரசுப் பணிகளுக்கு இணை கல்வித் தகுதிகளாக கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Not - Equivalent Degreee:
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் வழங்கும், B.Sc., Special Education and physics மற்றும் B.Sc. Special Education and Rehabilitation of physics பட்டமும், காலிகட் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., Physics (With main and subsidiaries 1. Mathematics 2. Chemistry) பட்டமும், குஜராத் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., (Special) Physics பட்டமும் அரசு பொதுப் பணிகளுக்கு கோரப்பட்டுள்ளB.Sc.Physics கல்வித் தகுதிக்கு இணையாக கொள்ள முடியாது.
B.Sc. Botany-ஐ கல்வித் தகுதியைக் கொண்ட அரசு பொது பணிகளுக்கு திருவள்ளூர் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., Biotechnology பட்டமும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., B.Ed. (4 year integrated Programme) பட்டமும், பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., Agri Biology பட்டமும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., (Botany, Biotechnology, Chemistry) மற்றும் B.Sc., (Botany, Zoology, Chemistry) ஆகியவைகள் இணை கல்வித் தகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அதேபோன்று, தேசிய தொழில்நுட்பக் கழகம் (திருச்சி) வழங்கும் M.Sc., Applied Science (Applied Electronics), மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் வழங்கும் M.Sc., Electronics and Communication ஆகிய பட்டங்கள் அரசுப் பணிகளுக்கு கோரப்பட்டுள்ள M.sc Physics கல்வித் தகுதிக்கு இணையாக கருத முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் B.A., Co. operation படிப்பு B.com படிப்புக்கு இணை கல்வித் தகுதியாக கொள்ளப்பட மாட்டடது. பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் M.Sc. Information Technology படிப்பு M.C.A படிப்புக்கு இணையாக கொள்ள மாட்டாது. மேலும், பல்வேறு கல்வித் தகுதி சார்ந்த விவரங்கள் அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. பதிவிறக்கம் செய்ய செய்ய Not - Equivalent Degrees, Equivalent Degree இணைப்பைக் கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment