Join THAMIZHKADAL WhatsApp Groups
💥 ஈட்டியவிடுப்பை ஒப்படைத்து பணமாக பெற மட்டுமே 240 நாட்கள் என்ற limit உள்ளதே தவிர..
ஊழியரின் கணக்கில் உள்ள EL-க்கு எந்தவித Limit-ம் அரசாணையில் வரையறை செய்யப்படவில்லை..
அதுவும் ஓய்வுபெறும் பொழுது தான் அந்த கணக்கும்..
(ஓய்வுபெறும் பொழுது ஒருவர் கணக்கில் 280 நாட்கள் இருக்கும் பட்சத்தில் 240 நாட்களை மட்டுமே ஒப்படைத்து பணமாக பெற இயலும் என்று மட்டுமே அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
சரெண்டர் இல்லை என்ற நிலை தொடர்ந்தால் 240 நாட்களுக்கு மேல் செல்ல பலருக்கு வாய்ப்பு உள்ளது..
எனவே EL-க்கு App-ல் Limit குறிப்பிடப்பட்டுள்ளது முரணாக உள்ளது.
💥 சிறப்பு தற்செயல் விடுப்பை பொருத்தவரை, பல வகையான சிறப்பு தற்செயல் விடுப்புகள் உள்ளன..
ஆனால் limit மிகவும் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது..
நாய் கடித்ததற்காக, கருக்கலைப்பு, ஹூமோதெரபி, தேசிய/சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டி இப்படி பலவற்றிற்கு SCL உள்ளது..
தேதிய அளவில் விளையாட்டில் கலந்துகொள்ளும் அரசு ஊழியருக்கு 30 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி உண்டு..
அப்படியிருக்க limit 10 நாள் மட்டும், அதுவும் Service-க்கு என்று App-ல் உள்ளது ஏற்புடையது அல்ல,
ஒருவரை நாய் இரண்டாவது முறை கூட கடிக்கலாம்,
சர்வதேச அளவில் பல முறை கூட ஒரு ஊழியர் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளலாம்..
எனவே சிறப்பு தற்செயல் விடுப்பிற்கெல்லாம் Limit வரையறை செய்வது முரணாக உள்ளது..
💥 24 மாதங்கள் வெளிநாட்டில் உயர்கல்வி பயில அரசு ஊழியர்களுக்கு அனுமதி உண்டு..
இந்த வகை விடுப்பு இடம்பெறவில்லை..
💥 2 வருடம் முதல் 5 வருடம் வரை மட்டுமே 90 நாட்கள் ML.
ஆனால் , 1 முதல் 5 வருடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..
💥 Leave on still born child இந்த விடுப்பு எடுக்க தகுதியுடையவர் யார் என்ற விளக்கம் தேவை..
💥 others என்ற option வைத்தால் தான் பட்டியலில் வராத விடுப்பு வகையையோ, அல்லது App-ல் குறிப்பிட்டுள்ள limit-க்கு மேல் தகுதியுள்ள விடுப்புகளை எடுக்க ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவும் முடியும் பிறகு DDO's அதற்கு அனுமதி அளிக்கவும் முடியும்..
No comments:
Post a Comment