Join THAMIZHKADAL WhatsApp Groups
வெற்றிலை நம் உடலுக்கு பலவித மருத்துவ பலன்களை அளிக்கிறது. நம்முடைய உடலில் பல நன்மைகளை செய்வதிலும் வெற்றிலையின் பங்கு வகிக்கிறது.
உணவு உண்ட உடன் செரிமான தன்மைக்காக வெற்றிலை போடுவது நம் பாரம்பரிய வழக்கில் உள்ளது. வாயில் துர்நாற்றம் வீசாமல் இருக்கவும் வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வருகிறது. வெற்றிலை சிறந்த நச்சு நீக்கி. நம் உடலில் சேரும் அழுக்குகளை வெற்றிலை நீக்கும்.
நம் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை சீராக வைக்க வெற்றிலை உதவுகிறது. வெற்றிலை வயிற்றில் உள்ள பியூரின் அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. உடலில் யூரிக் அமிலம் கட்டுப்பாடில்லாமல் அதிகமாகும், போது மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு வெற்றிலையை சாப்பிடலாம்.
நம் முன்னோர்கள் வெற்றிலையை சளி, காய்ச்சல், நெஞ்சு இறுக்கம், சுவாசக்கோளாறு ஆகியவை குணமாக்க வெற்றிலை பயன்படுத்தினர். வெற்றிலையை, கிராம்பு நீரில் கொதிக்க வைத்து டீ போல் குடித்து வர சுவாசக் கோளாறுகள் நீங்கும். தலைவலிக்கு வெற்றிலையால் பத்து போடலாம்.
வெற்றிலை வயிற்றில் உள்ள புண்களை குணமாகுகிறது. நம் உடலில் காணப்படும் பல நச்சுப்பொருள்களை வெற்றிலை சுத்தம் செய்கிறது. வெற்றிலை சர்பத் அருந்தினால் யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
No comments:
Post a Comment