Join THAMIZHKADAL WhatsApp Groups
வறட்டு இருமலை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்.
அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் குளிர்காலங்களில் வரக்கூடிய வறட்டு இருமல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் நீண்ட நாள் வறட்டு இருமல் எவ்வித செலவுமின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து நுரையீரல் பாதிக்கப்பட்டு வறட்டு இருமல், சளி, காய்ச்சல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.வறட்டு இருமலை குணப்படுத்தும் அனைத்து பண்புகளையும் சுக்குத்தூள் கொண்டுள்ளது.
இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடெண்ட் நுரையீரலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வறட்டு இருமல் வராதவாறு பாதுகாத்துக் கொள்கிறது. மிளகுத்தூள் இதில் உள்ள காரத்தன்மை சுவாச பாதைகளில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து மற்றும் நுரையீரலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை குணப்படுத்தி வறட்டு இருமல் வராதவாறு பாதுகாக்கிறது.
மஞ்சள் தூள் இவை நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. நம் உடலில் காயங்கள் ஏற்பட்டால் அதனை குணப்படுத்தும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஆன்ட்டிபயாட்டிக்காக செயல்படுகிறது.
வறட்டு இருமலை குணப்படுத்த சிறிதளவு நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வருவதன் காரணமாக இந்த பிரச்சனைகள் சரி செய்ய முடியும்.
ஒரு ஸ்பூன் சுக்குத்தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் அதனுடன் இரண்டு ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் காரணமாக நம் உடலில் உள்ள மற்றும் நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சுவாசப் பாதையினை புத்துணர்ச்சியாக்கி வறட்டு இருமல் வராதவாறு பாதுகாத்துக் கொள்கிறது.
பெரியவர்கள் இரண்டு வேளையும் எடுத்துக் கொள்ளலாம்.குழந்தைகளுக்கு ஒரு வேளை கொடுத்து வரலாம்.
No comments:
Post a Comment