Join THAMIZHKADAL WhatsApp Groups
பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் இவை அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்றும் அதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் குறித்தும் இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. அந்தவகையில், கற்பூரம் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் சரும பாராமரிப்பிற்கும் பெரிதும் மருத்துவ உதவியாக உள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கற்பூரத்தில் ஆண்டிபயாடிக் நிறைந்துள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூர எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.கைகள், உடலில் ஏதேனும் நமச்சல், எரிச்சல், எரியும் உணர்வு இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேய்த்தால் ஜில்லென இருக்கும். எரிச்சல் நீங்கும்.கையில் தொற்றுகளால் ஏதேனும் பாக்டீரியா, பூஞ்சைகளின் வளர்ச்சி இருக்கிறதெனில், ஆணி, நகச்சுத்தி என இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேங்காய் எண்ணெய்யில் பேஸ்ட் போல் குழைத்து தடவினால் குணமாகலாம்.
சிறு பூச்சிக் கடி என்றாலும் கற்பூரத்தை குழைத்துத் தடவினால் குணம் பெறலாம். கால்களில் ஏற்பட்டுள்ள வெடிப்பை சரிசெய்ய வெதுவெதுப்பான தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து காலை 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து, பின் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் வாரம் ஒருமுறை தடவிவந்தால், வெடிப்பு நீங்கும்.
இதுதவிர, கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அடர்த்தியாகும். முடி கொட்டுதல் இருக்காது. வழுக்கை இருந்தால் கற்பூரம் எண்ணெய் முடி வளர உதவுகிறது என்று கூறப்படுகிறது. தலையில் பேன் இருந்தாலும் கற்பூரத்தை தேய்த்தால் பேன் இறந்துவிடும். மேலும், கைகளில் கற்பூர எண்ணெயை தேய்த்து நுகர்வது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. முகத்தில் முகப்பருக்கள், பருக்களின் எரிச்சல், பருக்களின் கீரல்கள் இருந்தால் கற்பூர எண்ணெய் வாங்கி தடவலாம் அல்லது கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தடவலாம். கை , கால், முட்டு வலி என உடலின் எந்த பகுதியில் வலி இருந்தாலும் தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சூடாக்கி மசாஜ் செய்தால் வலி குறையும்.
No comments:
Post a Comment