Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 4, 2023

மலச்சிக்கலால் பிரச்சனையா? இந்த பழம் சாப்பிடுங்க, நிவாரணம் கிடைக்கும்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பலர் வயிற்றுப் பிரச்சினைகளால் போராடுகிறார்கள். மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற நோய்களால், மக்கள் சரியாகச் சாப்பிட முடியாமல், எங்கும் வெளியே செல்லவும் முடியாமல், பல இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. இதற்கு சிகிச்சை அளிப்பதாக பல நிறுவனங்கள் பல பொருட்களைத் தயாரித்து வருகின்றன. எனினும் அவற்றின் பயன்பாட்டில் நன்மைகள் குறைவாகவும் பக்க விளைவுகள் அதிகமாகவும் இருப்பதால், இவற்றால் பாதிப்பே அதிகம் ஏற்படுகின்றது.

இந்த காரணத்தால் பலர் இந்த மருந்துகளை பயன்படுத்த தயங்குகிறார்கள். எனினும்,மலச்சிக்கலுக்குஇயற்கையான தீர்வுகளை கையாண்டால், பக்க விளைவுகள் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. மலச்சிக்கலுக்கு இயற்கையான தீர்வாய் விளங்கும் ஒரு பழத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உங்கள் வயிற்றெரிச்சல் பிரச்சனையை நிரந்தரமாக போக்கலாம்.

ஏராளமான சத்துக்கள்

மலச்சிக்கலை போக்கவல்ல அந்த பழம் ஆப்பிள்!! ஆப்பிள் பழத்தில் இரும்பு, நார்ச்சத்து, புரதம், நீர் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதில் நார்ச்சத்துடன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்களும் உள்ளன. அவை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

ஆப்பிளில்உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.

தொற்றுநோய்கள் உங்களைத் தொட முடியாது

ஆப்பிளில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, பருவகால நோய்களின் தாக்குதல் ஏற்பட்டாலும், உடல் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக இருக்கும், நோய்த்தொற்றுகளால் உடலுக்கு எந்த வித சேதமும் வராது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனை விலகி, வயிற்றில் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கும்.

உடல் ஆற்றலை பெறுகிறது

ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் இருப்பதால், நமது உடல் பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. இவற்றின் மூலம், உடலுக்கு ஆற்றல் கிடைத்து, அதனால் சோர்வு விலகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்களும் இதில் ஏராளமாக உள்ளன.

நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும்

ஆப்பிளை உட்கொள்வதன் மூலம்உடல் எடையைகுறைக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக, வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதோடு, உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும். இதன் காரணமாக, ஒருவர் அதிகமாக சாப்பிடுவது, அதாவது ஆரோக்கியமற்ற பிற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. இதனால் அவரது உடல் பருமன் தானாகவே கட்டுக்குள் வரும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News