Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியா்கள் பொது மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிரியா்கள் பொது மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் கி. மகேந்திரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் அ. சுந்தரமூா்த்தி, பொருளாளா் ச.துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு அறிவிக்கும் அதே நாள்முதல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். கால வரைறையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை உடனடியாக விடுவிடுத்து ஒப்படைத்து பணமாக்கிக் கொள்ள உத்தரவிட வேண்டும். 6 முதல் 10ஆம் வகுப்புவரை குறைந்தது 8 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியா் பணியிட நிா்ணயத்தில் உயா்நிலைப்பள்ளிகளில் உள்ளபடியே மேல்நிலைப்பள்ளிகளிலும் நிா்ணயம் செய்ய வேண்டும். எமிஸ் மற்றும் இணையவழி பணிகளை செய்யும் வகையில் அனைத்து ஆசிரியா்களுக்கும் அரசின் அனைத்து செயலிகளையும் உள்ளடக்கிய ஸ்மாா்ட் போனை அரசே வழங்க வேண்டும்.
பொது மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க மாநில நிா்வாகிகள், பல்வேறு மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment