நம் முன்னோர்கள் நம் உடலில் உண்டாகும் அணைத்து விதமான நோய்களுக்கும் எளிய தீர்வை சித்த ஆயுர்வேத முறையில் ,அதே வேளையில் நாம் உண்ணும் உணவு மூலம் கொடுத்துள்ளனர் .ஆனால் நாம் அவற்றை தவிர்த்து விட்டு மேற்கத்திய உணவு முறைக்கும் ,பாஸ்ட் புட் உணவு முறைக்கும் மாறியதால் நாம் பல புது புது நோய்களை சந்தித்து வருகிறோம் .நம் உடலின் உண்டாகும் நோய்களுக்கு சில எளிய முறை வீட்டு தீர்வை பார்க்கலாம்
1. எந்த வேலை உணவுக்கு பின் சூடான தண்ணீர் ஒரு தம்ளர் பருகவும். இதனால் உணவில் உள்ள கொழுப்பு கரைந்து ஆரோக்கியம் மேம்படும்
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நோய்கள் வருவதை தடுக்கலாம்
3. 1/4 தேக்கரண்டி பட்டைத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை வாரம் ஒருமுறை தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறைந்து நோய்கள் அண்டாது .
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை மென்று விழுங்கவும். கால்சியம் , இரும்புச்சத்து கிடைக்கும்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக சிறுதானியங்கள் எடுத்துக் கொள்ளலாம். கோதுமையை கூட தவிர்க்க வேண்டும்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும். திப்பிலி கிடைத்தால் அதனையும் சேர்த்து கொள்ளவும்.நம் ஆரோக்கியம் இந்த குறிப்புகள் மூலம் மேம்படும்
No comments:
Post a Comment