* முதல் நாள் இரவில் ஒரு கப்பில் கால் ஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் வெந்தயம், சோம்பு கால் ஸ்பூன், ஆளி விதை கால் ஸ்பூன், கொத்தமல்லி விதைகள் கால் ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும்.
* பின்னர் இதில் 150 மில்லி தண்ணீர் ஊற்றவும். இதை அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். இரவு முழுவதும் இது நன்றாக ஊற வேண்டும்.
* ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து கூறிய கலவையை அதில் ஊற்றவும். பின்னர் மீடியம் பிளேமில் அடுப்பை வைத்து நன்றாக காய்ச்சவும். கொதிக்க கூடாது.
* பின்னர் இறக்கி வைத்து சிறிது ஆற விடவும். குடிக்கிற பக்குவம் வந்ததும் வடிகட்டி பின்னர் குடிக்கலாம். இதை காலை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக குடிப்பது மிகவும் நல்லது. இதை குடித்தவுடன் வேறு எதையும் அரை மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. எதையும் சுவைக்காக சேர்க்காமல் இதனை குடிப்பது மிகவும் நல்லது.
No comments:
Post a Comment