Join THAMIZHKADAL WhatsApp Groups
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா இளவம்பாடி, ஒடுகத்தூர், குருராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பாரம்பரியமிக்க வேலூர் முள்ளு கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.
சமையல் செய்து சாப்பிட சுவையாக இருப்பதால் வேலூர் முள்ளு கத்திரிக்காய்க்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த முள்ளு கத்திரிக்காய் பயிரிட பூச்சி மருந்து, உரம், விவசாய தொழிலாளர்கள் கூலி ஆகியவை செலவிட்டாலும் கட்டுப்படியாகாததால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளு கத்தரிக்காயை பயிரிடுவதை நிறுத்திவிட்டனர். தற்பொழுது வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50 விவசாயிகள் மட்டுமே முள்ளு கத்தரிக்காய்களை பயிர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் முள்ளு கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கேட்டு இளவம்பாடி விவசாயிகள் விண்ணப்பித்திருந்தனர். இதனை ஏற்று வேலூர் முள்ளு கத்திரிக்காய்க்கு போலீசார் குறியீடு இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு வேலூர் மாவட்ட ஆட்சியர் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் வேலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பேசிய விவசாயி ஒருவர் "தற்பொழுது அதிக அளவு உரம், தண்ணீர், செலவழித்து முள்ளு கத்தரிக்காய் சாகுபடி செய்கிறோம். லாபம் மிகவும் குறைவு, ஆனால் முள்ளு கத்திரிக்காயில் அதிக சுவை உள்ளதால் பிரியாணி செய்பவர்கள் தினமும் வந்து வாங்கி செல்கின்றனர்.
பலர் சென்னையில் இருந்து வந்து வாங்கி செல்கின்றனர் என தெரிவித்துள்ளார். அதேபோன்று ராமநாதபுரம் குண்டு மிளகாய் விற்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் தற்பொழுது தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment