Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக நாம் தினமும் உணவில் தயிர் சேர்த்து கொண்டால் அது பல ஆரோக்கிய நண்மைகளை கொடுக்கும் ,தயிர் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் என்பதால் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட கொடுக்கின்றனர் ,மேலும் மன அழுத்தம் ,மன பதட்டம் ,அல்சர் ,தலை பொடுகு ,வாயில் உண்டாகும் புண்கள் ,வயிற்று போக்கு ஆசன வாய் எரிச்சல் போன்ற பிரச்சினைகளை சரி செய்யும் ஆற்றல் கொண்டது .மேலும் பற்கள் ,எலும்புகள் வலுப்பெற உதவும் .மேலும் வயிற்று வலியை குறைக்கவும் ,உடல் எடையை குறைக்கவும் தயிர் பயன் படுகிறது .மேலும் சுகருக்கு இதன் அற்புதமான ஆற்றல் பற்றி பார்க்கலாம்
1. தயிரும் நீரிழிவைக் குறைக்க உதவும் என்று பல ஆரய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. புளிக்க வைக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் வைட்டமின்-டி, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளதாக கண்டுபிடிக்க பட்டுள்ளது .
3.மேலும் நொதித்தல் பலனாக உருவாகும் வைட்டமின்-கே, புரோபயாடிக் பாக்டீரியாக்கள் நீரிழிவு நோய்க்கெதிரான நல்ல பலன்களைத் தரும் என்று ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
4.தயிரில் உள்ள பாக்டிரியாக்கள் செரிமானத்தை சீராக்குகிறது இதன் விளைவாக குளுக்கோஸ் மெட்டபாலிசம் தாமதமாக நடைபெறும் ஆகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது என்று பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன
No comments:
Post a Comment