Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 26, 2023

கல்லீரலை அரண் போல் நின்று காக்கும் பீட்ரூட்


நம் உடலில் இதயத்துக்கு அடுத்தபடியாக முக்கியமான உறுப்பு கல்லீரல் .இந்த கல்லீரலின் மகிமை தெரியாத பலபேர் மதுவுக்கும் அடிமையாகி அதை கெடுத்து கொள்கின்றனர்.

இந்த கல்லீரல் ரத்தத்தை சுத்தப்படுத்துவது, புரதத்தை உருவாக்குவது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது, ஊட்டச்சத்துக்களை சீராக பயன்படுத்துவது என்று ஓயாமல் உழைத்து கொண்டேயிருக்கும் .இந்த கல்லீரல் பாதிப்பால் சிரோசிஸ் என்று அழைக்கப்படும் நோயால் ஆண்களும் பெண்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு காரணம் ஊட்ட சத்தில்லாமை, அதிக உடல் பருமன் ,மேலும் மது போன்ற காரணத்தால் உண்டாகிறது

பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் சில கல்லீரல் பாதுகாப்பது பற்றி பார்க்கலாம்


1.காய்கறிகளில் பீட்ரூட் கல்லீரல் மற்றும் இரத்தம் இரண்டையும் சுத்தம் செய்து கல்லீரலை அரணாக காத்து நம்மை பாதுகாக்கிறது

2.மலிவாக கிடைக்கும் வெங்காயமும் நமது கல்லீரலை பாதுகாக்கும் முக்கிய உணவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

3.வெங்காயத்தில் இருக்கும் அதிகப்படியான கந்தகம், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகள் நமது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News