Join THAMIZHKADAL WhatsApp Groups
தினசரி வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரினை பருகுவதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.
நம் உடலில் காய்ச்சல்,சளி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் வெந்நீர் குடிக்க வேண்டும் என கூறுவார்கள். ஆனால் தினசரி வெறும் வயிற்றில் வெந்நீர் பருகுவதன் காரணமாக நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது.
தினசரி வெறும் வயிற்றில் வெந்நீர் பருவதன் காரணமாக மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப்பட கூடியவர்கள் முற்றிலும் குணமடைய உதவும். லேசான மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்படக்கூடியவர்கள் இதனை தினசரி பருகி வந்தால் எவ்வித பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.
இரவு நேரங்களில் உறங்கும் பொழுது நெஞ்செரிச்சல் மற்றும் வாயு பிடிப்பு போன்ற பிரச்சனையினால் அவதிப்படக்கூடியவர்கள் தினசரி இதனை பருகி வருவதன் காரணமாக ஜீரண சக்தியை அதிகரித்து வாயு மற்றும் அஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் விடுபட உதவுகிறது.
அதிகப்படியான தலை முடி உதிர்தல் தற்போது உள்ள சூழலில் அதிகமாக இவை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தினசரி வெறும் வயிற்றில் வெந்நீர் பருகுவதன் காரணமாக தலை முடி உதிர்வதை தடுத்து தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடியின் வேர்ப்பகுதிகளை வலுவாக்கி தலைமுடி உதிராதவாறு பாதுகாக்கிறது.
மாரடைப்பு மற்றும் ரத்த அடைப்பு போன்ற பிரச்சனையினால் அவதிப்பட கூடியவர்கள் தினசரி வெந்நீர் குடிப்பதன் காரணமாக ரத்த நாளங்கள் சீராக இயங்கி மாரடைப்பு மற்றும் இரத்த அடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் பாதுகாப்பு உதவுகிறது.
No comments:
Post a Comment