Join THAMIZHKADAL WhatsApp Groups
90 முறைக்கு மேல் PHONEPE, GOOGLE PAY பயன்படுத்தினால், கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் facebook, whatappல் ஒருமுன்னெச்சரிக்கை பதிவு என்று ஒரு மெசெஜ் நெட்டிசன்களிடையே ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது.
அது உண்மையா என்றால்,, ஆம் உண்மை தான்.
இப்போது ஒரு வங்கி கணக்கை நாம் PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY போன்றவற்றில் இணைத்து, பயன்படுத்துகிறோம். அப்படி, ஆறு மாத காலத்திற்கு ஒருவர் 90 முறை மட்டுமே, இலவசமாக PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY போன்றவற்றில் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால், சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
இந்த புதிய மாற்றத்தால் அனைத்து வங்கிகளும் இந்த வரியை மேற்கொள்ளவில்லை. சில வங்கிகள் தான் கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கு பெயர் portfolio charges என்று சொல்கிறார்கள்.
அதாவது, 90 முறை இலவசமாக UPI கட்டணம் செலுத்தலாம், 91 முறையில் இருந்து, ஒவ்வொரு முறை, UPI மூலம் பணம் செலுத்த 2.25 + வரி பிடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு TRANSACTIONக்கும் 2.65 பிடிக்கப்படும்.
இதன் படி, ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலும் என 6 மாதங்களாக பிரிந்து, இந்த 6 மாதத்தில், நீங்கள் எவ்வளவு முறை PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY போன்ற அப்ளிகேசன் மூலம் பணம் செலுத்தி உள்ளீர்கள் என்று கணக்கிடுகிறார்கள்.
அப்படி கணக்கிடும் போது, நீங்கள், 6 மாதத்தில் 90 முறைக்கு மேல் UPI மூலம் பணம் செலுத்தி இருந்தால், 91வது முறையில் இருந்து, கட்டணமாக, 2.25+ஜிஎஸ்டி வரி பிடிக்கிறார்கள். இது எல்லா வங்கிகளிலும் கிடையாது.. உங்கள் வங்கி இந்த portfolio charges வசூலிக்கிறார்களா என்பதை உறுதி செய்து நீங்கள் இந்த வரியை செலுத்த வேண்டுமா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment