Join THAMIZHKADAL WhatsApp Groups
நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம் .
அந்தப் பொருட்கள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். சிலருக்கு பால் சார்ந்த பொருட்கள் கூட வாயு தொல்லையை ஏற்படுத்தலாம்.
மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலிபிளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.
வாயு தொல்லையை குறைக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.
1. இதற்கு நம் முதலில் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் சிறிய துண்டு இஞ்சி. இது பசியை தூண்டும் செரிமானமின்மையை போக்கும். இதை சிறு சிறு துண்டுகள் ஆக்கவும்.
2. அடுத்து நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் துளசி இலைகள் ஒரு பத்து துளசி இலைகளை எடுத்துக் கொள்ளலாம். மன இறுக்கம், மன அழுத்தம், வாயுத்தொல்லை, சளி, இருமல், ஆஸ்துமா, போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கக்கூடியது துளசி இலைகள்.
ஒரு மிக்ஸி ஜாரில் கட் பண்ணிய இஞ்சியையும் துளசி இலைகளையும் போட்டு முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். பிறகு ஒரு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து இதை வடிகட்டிக் கொள்ளவும்.
இதே போல் செய்து ஒரு மூன்று நாட்கள் தொடர்ந்து காலை, மாலை என இருவேளைகளிலும் இந்த சாற்றினை குடித்து வர வாயு தொல்லை உடலில் இருந்து முழுவதும் நீங்கும். அதற்கு அப்புறம் வாயு தொல்லையே இருக்காது. ஆனால் நாம் சாப்பிடும் உணவு முறைகளில் கட்டாயம் சில மாற்றங்களை செய்து வர வேண்டும்.
வாயு தொல்லை ஏற்படக்கூடிய உணவுப் பொருட்களை சிறிதளவு எடுத்துக் கொள்வதும் அல்லது அவற்றை தவிர்ப்பதும் இந்த பிரச்சனை முழுவதுமாக குறைக்கும்.
No comments:
Post a Comment