Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சம்பந்தப்பட்ட பழங்கள் மற்றும் பலகாரங்கள் சாப்பிட முடியாது.
பழங்களில் நிறைய நன்மைகள் உள்ளன ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சில பழங்களை தவிர்க்க வேண்டும்.
இதில் செவ்வாழை பழத்தில் நிறைய நன்மைகள் உள்ளன. கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிறைய பிரச்சனைகளை நீக்கக்கூடியது.
சிறுநீரக கற்கள், கல்லீரல் பிரச்சனை, கண் பார்வை, உடல் சோர்வு போன்றவற்றை போக்கக்கூடியது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் என்னதான் மாத்திரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம் உணவை கட்டுப்பாடோடு உட்கொண்டு வந்தால் மட்டுமே சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் செவ்வாழைபழம் சாப்பிடலாம் ஆனால் அவர்கள் உண்ணும் உணவை குறைத்துக் கொள்ள வேண்டும் அதாவது காலை மூன்று இட்லி எடுத்துக் கொண்டால் அதற்கு பதிலாக ஒரு இட்லி மட்டும் இரண்டு செவ்வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு சாப்பிட்டால் மட்டுமே சுகர் லெவலை கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள முடியும்
No comments:
Post a Comment