Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணி புரிவோருக்கு ,குறைவான அளவில் தண்ணீர் குடிப்போருக்கும் ,நார் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடாதோருக்கும், முதுமையில் இருப்போருக்கும் அடிக்கடி மல சிக்கல் உண்டாகும் .இந்த மல சிக்கல் இருந்தால் அன்றைய நாள் முழுவதும் எந்த வேலையிலும் உற்சாகத்துடன் செயல் பட முடியாது .மேலும் இது பல்வேறு நோய்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் .எனவே இந்த மலசிக்கலை இயற்கை முறையில் குணப்படுத்த சில வழிகளை கூறியுள்ளோம்
ஒரு குக்கரில் மூன்று துண்டு சர்க்கரைவள்ளி கிழங்குகளை போட்டு அதன் மீது ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சம் மிளகுத்தூள் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி நன்கு வேகுமாறு விசில் விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இதை நன்கு மசித்து சாப்பிட்டால் மல சிக்கல் தீரும் ,மேலும் இந்த சிக்கல் தீர சில வழிகள்
1.அகத்திக்கீரையை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ண மல சிக்கல் தீரும்
2. பப்பாளி பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வர மல சிக்கல் தீரும்.
3.பார்லி அரிசி 20 கிராம்,புளிய இலை 40 கிராம் காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வர மல சிக்கல் தீரும்
4. முளைக்கீரையை சாப்பிட்டு வர மல சிக்கல் தீரும்
5.இரவில் மாதுளம்பழம் சாப்பிட மல சிக்கல் தீரும்
6.முள்ளங்கி இலைச்சாறு 5 மில்லி 3 வேளை சாப்பிட்டு வரமல சிக்கல் தீரும்
No comments:
Post a Comment