Join THAMIZHKADAL WhatsApp Groups
நரம்பு தளர்ச்சி குணமாக ஒரு சில வீட்டு முறை வைத்தியங்களை இந்த பதிவு மூலமாக காணலாம்.நரம்பு தளர்ச்சி ஏற்பட காரணம் நம் உடலுக்கு தேவையான போதிய சத்துக்கள் சரிவர கிடைக்காததன் காரணமாக நரம்பு தளர்ச்சிகள் ஏற்படுகிறது.
சரியான உறக்கம் இல்லாதது, அதிகப்படியான வேலை காரணம் போன்ற பிரச்சனைகளையும் காரணமாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும். அதனை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.
நரம்புத்தளர்ச்சி வராமல் பாதுகாக்கும் குணங்கள் முருங்கைக்கீரையில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. முருங்கைக் கீரையில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரையினை பொரியல் செய்து உணவுகளுடன் எடுத்துக் கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு மற்றும் நரம்புகளுக்கு வலிமையை அளிக்கும்.
வாழைப்பூக்களை பொரியல் செய்து உணவுகளுடன் சேர்த்துக் கொள்வதன் காரணமாக உடம்பில் உள்ள நரம்பு தளர்ச்சி வராதவாறு பாதுகாத்து கொள்கிறது. கடுக்காய் பவுடர்களை இரவு உறங்குவதற்கு முன் ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் கலந்து பருகி வருவதன் காரணமாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.
சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய கசகசா. உணவுடன் சேர்த்து உட்கொண்ட பிறகு வாயில் போட்டு மெல்வதன் காரணமாக நரம்பு தளர்ச்சி வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment