Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 13, 2023

இரவு தூங்கும் போது கெண்டைக்கால் தசை இழுத்து பிடிக்கிறதா? கை கால் மரத்து போகிறதா?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இரவு தூங்கும் போது கெண்டைக்கால் தசை பிடித்துக் கொள்வது, கை கால் மரத்துப்போவது, போன்ற பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். பொதுவாக குளிர் காலத்தில் தசை பிடிப்பு, கெண்டைக்கால் பிடித்துக் கொள்வது, கை கால் மரத்துப் போவது போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்.

கால் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்படும் போது அசைக்கக்கூட முடியாத நிலை ஏற்படும். வலி பிடித்து இழுக்கும். தசைகளில் சுருக்கம் மற்றும் இறுக்கம் ஏற்படுவதால் இந்த தசைப் பிடிப்பு ஏற்படுகிறது. இது சில பேருக்கு 10 நிமிடங்களில் சரியாகிவிடும். சில பேருக்கு ஒரு நாள் முழுவதும் வலி இருக்கும்.

இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் நான்கு நாட்களில் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

அதற்கு முதலில் எடுத்துக் கொள்ளும் பொருள் வேப்ப எண்ணெய். இது தோளில் உள்ள சுருக்கத்தைப் போக்கி காயம் மற்றும் தழும்புகளை ஆற்றக் கூடியது.

ஒரு பவுலில் 3 ஸ்பூன் வேப்ப எண்ணையை எடுத்துக் கொள்ளவும். இதில் முக்கால் ஸ்பூன் ஜாதிக்காய் பொடியை போடவும். இதுவும் கெண்டைக்கால் வலி, மூட்டு வலியை போக்கக்கூடியது.

அடுத்து இதில் ஒரு கற்பூரத்தை பொடித்து போடவும். இவை மூன்றையும் நன்றாக கலக்கி டபுள் பாய்லர் முறையில் நன்கு சூடு படுத்தவும். அதாவது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நீர் ஊற்றி நீர் சூடேயறியதும் அதில் ஆயில் உள்ள பவுலை வைத்து சூடு படுத்தவும்.

பிறகு இதை எடுத்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கை கால் வலி, கால் மரத்து போதல், கெண்டை வலி உள்ள இடங்களில் தடவலாம். இதை ஒரு நாளில் மட்டும் தடவினால் போதாது குறைந்தபட்சம் ஒரு நான்கு நாட்களாவது தடவினால் தான் நன்கு பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News