Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 18, 2023

மாதத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக் போட்டாலே முடி கொட்டாது. கருகரு கூந்தலுக்கு உலகத்திலேயே பெஸ்ட்டான ஹேர் பேக்னா, அது இது மட்டும்தான்..!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கருகருன்னு முடி வளர்ச்சியை பெறுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் இயற்கையான முறையில் இந்த ஹேர் பேக்கை நாம் பின்பற்றி வந்தால், வெள்ளை முடி வருவதையும் தவிர்க்கலாம்.

வந்த வெள்ளை முடியை கருப்பாகவும் மாற்றலாம். அதேசமயம் முடி திக்காகவும் அடர்த்தியாகவும் வளரும். முடி உதிர்வு குறையும். முடிக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். இத்தனை அம்சங்களும் பொருந்திய அந்த ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா. இதோ அந்த அழகு குறிப்பு உங்களுக்காக.

பெஸ்ட் ஹென்னா ஹேர் பேக் தயார் செய்யும் முறை:

மறுநாள் காலை இந்த பேக்கை தலையில் போட வேண்டும் என்றால், முந்தைய நாள் இரவே பேக்கை தயார் செய்து வைத்து விட வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு பெரிய சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி, காபித்தூள் 1 ஸ்பூன், டீ தூள் 1 ஸ்பூன், கருவேப்பிலை பொடியாக நறுக்கி 1 ஒரு கைப்பிடி போட்டு, இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதி வந்து, தண்ணீரின் நிறம் மாறியதும், வடிகட்டி அந்த டிகாஷன் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு ஹென்னா பவுடரை போட்டு, அந்த ஹென்னா பவுடருக்கு தேவையான அளவு நம் தயார் செய்து வைத்திருக்கும் டிகாஷன் தண்ணீரை ஊற்றி, கட்டிகள் இல்லாமல் கலந்து மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலை எடுந்து பார்க்கும் போது, இந்த இரும்பு கடாயில் நாம் கலந்து வைத்திருக்கும் ஹென்னா கருப்பு நிறத்தில் வந்திருக்கும். இந்த ஹென்னாவோடு இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி, அடித்து கலக்கி இந்த பேக்கை தலையில் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

முந்தைய நாள் இரவே உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்து விடுங்கள். ஆயில் உள்ள முடிவில் தான் இந்த பேக்கை அப்ளை செய்ய வேண்டும். இல்லை என்றால் முடி டிரை ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எண்ணெயாக இருக்கும் முடியில் மேல் பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை, எல்லா இடங்களிலும் நன்றாக படும்படி இந்த பேக்கை போட்டுவிட்டு அப்படியே கொண்டைக்கட்டி மேலே ஒரு கவர் போட்டுக்கோங்க.

ஒரு மணி நேரம் பேக் அப்படியே தலையில் இருக்க வேண்டும். அதன் பிறகு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசி விடுங்கள். சூப்பரான முடி உங்களுக்கு கிடைத்துவிடும். மாதத்தில் ஒரு நாள் இந்த பேக்கை போட்டாலே போதும். முடிக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் இருக்கும்.

முடி, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் அடர்த்தியாக வளர வேண்டும் என்றால், பயோட்டின் சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பாதாம், பூசணி விதை, கீரை வகைகள், வேர்கடலை, நட்ஸ் வகைகள் இப்படிப்பட்ட சத்து நிறைந்த பொருட்களை தினமும் சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. முடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க. இது ஒரு பெஸ்ட் ஹேர் பேக்காக இருக்கும். எல்லாவிதமான தலைமுடிக்கும் இந்த ஹேர் பேக் பொருந்தும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News