Join THAMIZHKADAL WhatsApp Groups
மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணங்கள் கொண்ட அற்புத திரவம் தேன். தேனீக்கள் பல நாட்களாக உழைத்து மரத்தின் உச்சியில் சேர்த்துவைக்கும் தேனை மனிதர்கள் தீப்பந்தம் காட்டி தேனிக்களை விரட்டிவிட்டு தேனடையை மரத்தில் இருந்து எடுத்து சுத்திகரித்துப் பயன்படுத்துகின்றனர்.
இது ஒருவகையில் தேனீக்களின் உழைப்பை களவாடுவதுபோல(!) என விவாதிப்போரும் உண்டு. இன்று வளர்ப்புத் தேனீக்கள் தயாரிக்கும் தேன் பாட்டில்களில் அடைக்கப்பட்டு சூப்பர் மார்கெட்களில் விற்கப்படுகின்றன. இவற்றுக்கு அதிக மருத்துவப் பலன்கள் உண்டு. பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கொண்ட தேனை வெந்நீரில் கலந்து சிலர் சாப்பிடுவர்.
இவ்வாறு சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோமா? தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம். வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெந்நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் அதிலிருந்து விடுபடலாம்.நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஆற்றல் தேனில் உள்ளது. நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
மேலும் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும். மிதமான சூடுள்ள நீரில் தேனைக் கலந்து தினமும் காலை குடித்துவந்தால் உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேறும். மேலும் உடலில் இருந்து கழிவுப்பொருட்களையும் வெளியேற்றும் டீடாக்ஸ் உணவாக தேன் உள்ளது. தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்துக்குப் பாதுகாப்பை அளிக்கும்.
பொலிவான சருமத்தைப் பெற உதவும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெந்நீரில் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவிட்டு ஜாகிங், உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடை வேகமாகக் குறையும். வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல் நீங்கும்.
No comments:
Post a Comment