Join THAMIZHKADAL WhatsApp Groups
குளிர்காலத்தில் நம்மை பல நோய்கள் தாக்கும். இந்த குளிர்கால நோயிலிருந்து நம்மை பாதுக்காக்க உதவுவது வெல்லம் .ஆம் வெல்லத்தில் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் ஆற்றல் உள்ளது .வெல்லம் தண்ணீரை காலையில் குடிப்பதால் இதில் உள்ள பல விட்டமின்கள் நமக்கு குளிர்காலத்தில் சளி ,இருமல் தொல்லை உண்டாகாமல் பாதுகாக்கும் .மேலும் இது இது இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது மற்றும் உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது.எனவே இந்த வெல்லம் தண்ணீரை குடிப்பதன் மூலம் நம் உடல் பெரும் ஆரோக்கியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .முதலில் வெல்லம் தண்ணீரை தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
அது கொதித்ததும், அதில் ஒரு நடுத்தர அளவிலான துண்டு வெல்லத்தைச் சேர்த்து, அது உருகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்
இது வெதுவெதுப்பாக இருக்கும் போது, அடுப்பை நிறுத்தி விடுங்கள் .பின்னர் இது சூடு ஆரியதும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இந்த சூடான பானம் உங்கள் நாளின் காலை வேளைக்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்
1.வெல்லம் தண்ணீர் குடிப்பதால் நம் எலும்புகளை வலுவாக்கும்,
2.வெல்லம் தண்ணீர் குடிப்பதால் மூட்டு வலிகளைப் போக்கும். மேலும் உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இவை உதவும்.
3.வெல்லம் தண்ணீர் கீல்வாத வலியையும் குறைத்து நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
No comments:
Post a Comment