ஒருவருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜை எடிட் செய்யும் வகையில் புதிய வசதியை தற்போது வாட்சப் நிறுவனம் வழங்கியுள்ளது.
நாம் அதிகளவில் பயன்படுத்தப்படும் அப்களில் வாட்சப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், ஆரம்பக் காலகட்டத்தில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட மெசெஜை டெலிட் செய்யவோ, திருத்தவோ இயலாது. சில நாட்களுக்கு பிறகு வாட்சப் சாட் மற்றும் குழுக்களில் அனுப்பும் மெசெஜை டெலிட் ஃபார் மீ அல்லது டெலிட் ஃபார் எவரிஒன் போன்ற தேர்வுகளை பயன்படுத்தி நிரந்தரமாக அழிக்க முடியும். அதுவும் மெசேஜ் அனுப்பப்பட்டு ஒரு மணிநேரத்தில் டெலிட் பார் எவரி ஒன் கொடுத்தால் மட்டுமே அந்த மெசெஜை நம்மால் எளிதாக அழிக்கமுடியும்.
வாட்சப் புதிய புதிய அப்டேட்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில் ஃஸ்டேட்டஸில் குரல் பதிவுகளை வைக்கும் முறையை வாட்சப் அறிமுகப்படுத்தியது. அதேபோல கணினி அல்லது லேப்டாப்பில் வாட்சப் பயன்படுத்துவோர் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் வாட்சப்பை பயன்படுத்தும் முறையை பீட்டா வெர்சன் அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஒரு கணினியிலோ அல்லது லேப்டாப்பிலோ வாட்சப்பை லாக் அவுட் செய்யாமலேயே பயன்படுத்த முடியும். அதேபோல நாம் வாட்சப் பயன்படுத்தும் மொபைல் போனில் நெட்வொர்க் அல்லது இன்டெர்நெட் வசதி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கணிணியில் இருந்தால் போதுமானது. இதனை மல்டி டிவைஸ் பீட்டா வெர்சன் என அழைப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வாட்சப் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. அதன்படி நாம் ஒரு நபருக்கு தவறுதலாக எழுத்துப் பிழையுடன் பதிவுகள் அனுப்பிவிட்டால் பதறிப் போய் உடனே டெலிட் ஃபார் எவரிஒன் செய்யத் தேவையில்லை. மாறாக நாம் அனுப்பிய பதிவை எடிட் செய்து அதில் இருக்கும் எழுத்துப் பிழைகளை சரிசெய்யவோ அல்லது அந்த சில வார்த்தைகளை நீக்கவோ, சேர்க்கவோ செய்து கொள்ளலாம். நாம் பதிவை அனுப்பிய 15நிமிடங்களுக்குள் இவற்றை எடிட் செய்யும்படியாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மொபைலில் வாட்சப் பயன்படுத்துவோராக இருந்தால் இந்த வசதியை பெற காத்திருக்க வேண்டும். காரணம் என்னவெனில் தற்போதைய அப்டேட் பீட்டா வெர்சன் வாட்சப்பை இணையதளத்தில் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சேவை மொபைலில் கொண்டு வருவதற்கான பணிகளை மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment