Join THAMIZHKADAL WhatsApp Groups
NEET UG (2023): 2023-ம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
2023-ம் ஆண்டுக்கான நீட் தேர்விற்கு விண்ணப்ப நடைமுறை நாளை முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன், மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின்(https://neet.nta.nic.in/) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
2019 தேசிய மருத்துவ வாரிய சட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை/முதுநிலை பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மூலம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது.
முன்னதாக, 2023ம் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 7ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்ப நடைமுறை தொடங்கும என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விண்ணப்ப நடைமுறை நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நீட் தேர்வு கூட்டாட்சிக் கொள்கைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பு சட்டம் வழங்கிய சம உரிமையை மீறுவதாகவும் கூறி, முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் மனுக்களை திரும்ப பெற்று தமிழ்நாடு அரசு புதிய உரிய மனுக்களை (Original Suit) தற்போது பதிவு செய்துள்ளது.
தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், நீட் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை NTA இணையதளத்தில் neet.nta.nic.in இருந்து அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment