Sunday, March 26, 2023

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000.. ரேஷன் கார்ட் இருந்தா மட்டும் போதாது! இதையும் பண்ணுங்க.. முக்கிய தகவல்

குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக அரசு தரப்பு வட்டாரங்கள் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த அறிவிப்பை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக அரசு தரப்பு வட்டாரங்கள் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது. அதன்படி குடும்ப தலைவிகள் தனியாக வங்கி கணக்கை வைத்து இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பல குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கு இல்லை. அவர்கள் இணை கணக்கு வைத்து இருப்பார்கள் அல்லது கணக்கே வைத்து இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் பணம் பெறுவதற்கு வங்கி கணக்கு கட்டாயம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஏற்கனவே பெண்களுக்கு அளிக்கப்படும் கட்டணமில்லா பேருந்து காரணமாக பெண்கள் இடையே திமுகவிற்கு மதிப்பு உள்ளது. தற்போது இந்த திட்டத்தையும் செயல்படுத்தி பெண்களை மொத்தமாக கவரும் விதமாக திட்டத்தை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன் திட்டத்தை கொண்டு வந்தால் அரசியல் ரீதியாகவும் பெரிய அளவில் அது பலன் அளிக்கும் என்று திமுக தரப்பு நினைக்கிறதாம்.பெரிய விழா எடுக்கப்பட்டு இந்த திட்டம் செப்டம்பரில் என்கிறார்கள். தற்போது பயனாளர்கள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆய்வு முடிந்ததும், அதற்கான லிஸ்ட் எடுக்கப்படும்.

வறுமை தொகைக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். ரேஷன் அட்டையில், PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. NPHH -S, NPHH - NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே புதுமைப்பெண் திட்டத்தில் பெண் குழந்தைகள் 1000 ரூபாய் வாங்கினாலும், அவர்களின் அம்மாக்குகளுக்கும் இந்த நிதி உதவி அளிக்கப்படும். அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்காது. முதியோர் உதவித்தொகை பெற்றாலும், அந்த பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News