Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்றைய காலகட்டத்தில் உடல் எடை குறைய வேண்டும் என்று நினைத்து அதனால் வேதனைப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் அதற்கென்று தேடிப்போய் மாத்திரைகள் மற்றும் புரோட்டின் பவுடர்கள் என காசை வீணாக்குகிறார்கள், ஆனால் நமது வீட்டு பொருட்களை வைத்தே மாதம் 10 கிலோ எடை குறையலாம் என்று அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது, அப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் இதனை தவறாமல் பயன்படுத்தி நல்ல பலன்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்க மிக எளிமையான வழி. வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை வைத்து உடல் எடையை குறைக்க சில குறிப்புகளை நாம் இங்கே பார்க்கலாம்.. நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்து நம் உடல்எடையை குறைக்கலாம்
தேவையான பொருட்கள் :
1. சீரகப்பொடி -1 ஸ்பூன்
2. பட்டை தூள் -1/4 ஸ்பூன்
3. இஞ்சி பவுடர் -அரை ஸ்பூன்
4. எலுமிச்சை தோல் -இரண்டு துண்டு
5. தேன் - சுவைக்கேற்ப அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
2. அதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.
3. அந்த கொதித்த தண்ணீரில் சீரகப்பொடி சேர்த்து கொள்ளவும்.
4. பின் பட்டை தூள் 1/4 சேர்த்து கொள்ளவும்.
5. இஞ்சி பவுடர் அரை ஸ்பூன் எடுத்து அதில் போடவும்.
6. பிறகு எலுமிச்சை தோல் சேர்த்து கொதிக்க விடவும்.
7. சற்று ஆரியபின் அந்தத் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
8. அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலந்து அருந்தவும்.
இதை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நன்கு உடல் எடை குறையும், பத்தே நாட்களில் 10 கிலோ குறையும். உடம்பு குறையவில்லையே என்று நினைத்து வருந்துபவர்களுக்கு இது ஒரு இனிய மருந்தாக இருக்கும்.
No comments:
Post a Comment