Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 27, 2023

12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 200 காலியிடங்கள்..!

இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

குறைந்தது 10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது. recruitment.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவி: இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் Junior Assistant-cum-Typist (JAT); சம்பள நிலை: 19,900- 63,200 (நிலை - 2)

முக்கியமான நாட்கள்: இதற்கான, விண்ணப்பங்கள்எதிர்வரும் ஏப்ரல் 20ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை பெறப்படும்.

காலியிடங்கள்: 200

தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10,+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 ஆங்கில வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லது நிமிடத்திற்கு 35 இந்தி வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.600 ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 20-04-2023 அன்று 18-27-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெறத் தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறத் தகுதியுடைவராவர்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

காலியிடங்கள், தேர்வு முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆட்சேர்க்கை அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், தகவல் தேவைப்படுவோர் அறிக்கையை பதிவிறக்கம் செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள https://recruitment.nta.nic.in/. என்ற இணைப்பைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News