Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதில் சில முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகள் மூலம் சில பொருட்கள் விலைமாற்றங்களை சந்திக்க உள்ளது என்றும், ஏப்ரல் 1 முதல் அவை அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், சில பொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க உள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கு முந்தைய முழு அளவிலான பட்ஜெட் என்பதால் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் வாய்ந்து.
வரி விதிப்பு மாற்றங்கள்!
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, சில்லறை விற்பனை சந்தையில் பல்வேறு பொருட்களின் விலையை பாதிக்கும் வரி, சுங்க வரி மற்றும் வரி அடுக்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் சில குறிப்பிட்ட பொருட்கள் ஏப்ரல் 1 முதல் விலை உயர்ந்தாலும், சில பொருட்களின் விலை மலிவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த மாதத்திலிருந்து மலிவாகவும், விலை உயர்வு பெறும் பொருட்களைப் பற்றி இனி காண்போம்.
ஏப்ரல் 1 முதல் விலை உயரும் பொருட்கள்!
2023-24 பட்ஜெட்டின்படி, சிகரெட், வெள்ளி, போலி நகைகள், தங்கக் கட்டிகள், பிளாட்டினம், மின்சார சமையலறை புகைபோக்கிகள், இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகள் மற்றும் சைக்கிள்கள் மற்றும் எலக்ட்ரானிக் வாகனங்கள் ஆகியவற்றின் விலை ஏப்ரல் 1 முதல் உயரும் எனக் கூறப்படுகிறது.
சிகரெட்
மேலும் குறிப்பிட்ட சிகரெட்டுகளுக்கான சுங்க வரி 16 சதவீதம் அதிகரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தங்கக் கட்டிகள் மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட கற்கள் மற்றும் நகைகள் மீதான வரி, வெள்ளிக் கட்டிகள் மற்றும் பொருட்களுக்கான இறக்குமதி வரி, பித்தளை மற்றும் வீட்டில் எலக்ட்ரானிக் புகைபோக்கிகள் விலையும் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் சீதாராமன் கூறியபடி சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி 7.5% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.
விலை குறையும் பொருட்கள்!
ஏப்ரல் 1 முதல், தொலைக்காட்சியின் விலைகள் சற்று குறையும், ஏனெனில் ஓப்பன் செல் TV பேனல்களின் பகுதிகளுக்கான சுங்க வரி தற்போதுள்ள 5% இலிருந்து 2.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி
இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள், லித்தியம் அயன் பேட்டரிகள், இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் வாகனங்கள், கேமரா லென்ஸ்கள், பொம்மைகள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் சைக்கிள்கள் மற்றும் ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைர விதைகள் ஆகியவற்றின் விலையும் முந்தைய ஆண்டை விட குறைவாக இருக்கும்.
சுங்க வரி குறைப்பு
இது தவிர, கேமரா லென்ஸ்கள் மற்றும் மொபைல் போன்களின் சில பாகங்கள் மீதான அடிப்படை சுங்க வரி குறைப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதால் ஸ்மார்ட்ஃபோன் விலைகளும் குறையும்.
No comments:
Post a Comment