Tuesday, March 21, 2023

ரேஷனில் 2 கிலோ கேழ்வரகு .. குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள், விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு: வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!!

தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து தமது உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை பின்வருமாறு..,.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்.

தமிழ்நாடு அரசால் ₹1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ₹783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கம்பு, கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்து கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும்.

2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னகன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.

கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதற்கட்டமாக தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வழங்கப்படும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News