Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
அந்த அறிவிப்பின்படி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 2859 காலி பணியிடங்கள் இருக்கின்றன. அவற்றில் 2674 பணியிடங்கள் சமூக பாதுகாப்பு உதவியாளர் பணிகளுக்கும் 185 பணியிடங்கள் ஸ்டெனோகிராஃபர் பணியிடங்களுக்கும் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
அந்த அறிவிப்பின்படி சமூக பாதுகாப்பு உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டெனோகிராஃபர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 உச்சபட்ச வயது வரம்பு 27 ஆகும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் ஐந்து வருடங்கள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஓ பி சி பிரிவினருக்கு மூன்று வருடங்கள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பி.டபிள்யூ.டி பிரிவினருக்கு 10 வருடங்கள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ. 29,200 – 92,300/- வரை சம்பளம் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெனோகிராஃபர் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ. 25,500 – 81,100/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை https://recruitment.nta.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.04.2023 ஆகும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறனாய்வு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய epfindia.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment