Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 21, 2023

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 20.3.2023 - முடிவுகள்

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று (20.3.2023) சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அ.வின்சென்ட்பால்ராஜ், திரு.எம்.பி.முருகையன் & திரு.ச.நேரு ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அனைத்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது.

1. இன்று (20.3.2023) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாதது, மிகுந்த ஏமாற்றம் மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்களை தமிழக அரசு புறக்கணித்து வருவதாகவே ஜாக்டோ ஜியோ கருதுகிறது. இது குறித்தான பத்திரிகை செய்தியை விரிவாக வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

2. மேலும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு ஏற்கனவே முடிவு செய்து அறிவித்தபடி வருகின்ற 24.3.2023 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 20 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிலான "மனித சங்கிலி போராட்டத்தினை" சக்தியாக நடத்துவது என இறுதி செய்யப்பட்டது.

3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதை கருத்தில் கொண்டு, கோரிக்கைகளை வென்றெடுக்கும் அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகளை முடிவு செய்வதற்காக வருகின்ற 2.4.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருச்சியில் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

அ.வின்சென்ட்பால்ராஜ்
எம்.பி.முருகையன்
ச.நேரு
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,
ஜாக்டோ ஜியோ.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News