Join THAMIZHKADAL WhatsApp Groups
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரம்ப கல்வி நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கல்விக் கொள்கை, தற்போதுள்ள, 10+2 பாடத்திட்ட முறைக்கு பதிலாக,முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தியது. 3-8 வயதுக்கு இடையே உள்ளது. அடிப்படை கல்வி நிலையாகும். இதில் 3 ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியும் (அங்கன்வாடி மையங்கள் மூலமாக கற்றல் நடைபெறும்) 2 ஆண்டுகள் அடிப்படை நிலை I மற்றும் நிலை II கல்வியும் அடங்கும்.
இந்த 8 வயது வரையிலான குழந்தைகளுக்கான தேசியப் பாடத்திட்ட கற்பித்தல் கட்டமைப்பை (National Curriculum Framework for Foundational Stage) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கியது. கடந்தாண்டு அக்டோபர் மாதம், நாட்டிலுள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான முதற்கட்டமாக அறிமுகம் செய்தார்.
இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில், நர்சரி வகுப்பு முதல், இரண்டாம் வகுப்பு வரையில் ஐந்து வகுப்புகளுக்கு இந்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பை அமல்படுத்தப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது . நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த புதிய கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட வேண்டிய பாடங்கள் தொடர்பாக NCERT இணையதளத்தில் பாடத்திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடதிட்டங்களை தனியார் பதிப்பகங்கள், பாடபுத்தகங்களாக அச்சிடலாம். இதை பின்பற்றி தனியார் பதிப்பகங்கள், பாட புத்தகங்களை தயாரித்து வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக அந்தந்த மாநில மொழி பாடம், இந்தி , ஆங்கிலம் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment