Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய காலணி வடிவமைப்பு மற்று்ம் மேம்பாட்டு நிறுவனத்தின் அகில இந்திய நுழைவுத்தேர்வு, ஐஐடி மற்றும் என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜெஇஇ நுழைவுத் தேர்வு, மத்திய அரசு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழைவுத்தேர்வு, நெஸ்ட் நுழைவுத்தேர்வு, சென்னை கணிதவியல் நிறுவன நுழைவுத்தேர்வு என பல்வேறு மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், நுழைவுத்தேர்வு கட்டணம், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அங்குள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு தெரிவிப்பதுடன், அந்த நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment