Thursday, March 23, 2023

குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக உயர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர் ஆகிய பதவிகளில் 7,138 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த 24.7.2022 அன்று ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 18லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில், குருப்-4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7,138-லிருந்து 10,117 - ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பதவிகள் வாரியாக உயர்த்தப்பட்ட காலி இடங்களின் எண்ணிக்கை விவரம்: (பழையகாலியிடங்களின் எண் ணிக்கை அடைப்புக்குறிக்குள்)

1. கிராம நிர்வாக அலுவலர் - 425 (274).

2. இளநிலை உதவியாளர் மற்றும் பில் கலெக்டர் - 4,952 (3,731).

3. தட்டச்சர் - 3,311 (2,108).

4. சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) - 1,176 (1,024).

மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களில் தட்டச்சர், இளநிலைஉதவியாளர் உள்ளிட்ட பதவிகளிலும் புதிய காலிப்பணியிடங்கள் வரப்பெற்றுள்ளன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 7,138-லிருந்து 10,117-ஆக அதிகரிக்கப் பட்டுள்ளதால், குருப்-4 தேர்வுக் கான கட்-ஆஃப் மதிப்பெண் சற்று குறைய வாய்ப்புள்ளதாக போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News