பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திர திருவிழா. முருகன் கோயில்களில் மட்டுமின்றி அனைத்து குலதெய்வ கோயில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிக்க :ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில்...லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை...!
இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், பொதுதேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடைபெறும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment